பிரான்சில் வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

#Death #France #children
Prasu
1 year ago
பிரான்சில் வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

வீடொன்றில் இருந்து 2 தொடக்கம் 13 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Haute-Savoie மாவட்டத்தில் உள்ள Taninges எனும் சிறு நகர்ப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அங்கு வசிக்கும் தந்தை ஒருவர், தனது 2, 11 மற்றும் 13 வயதுடைய பிள்ளைகள் சடலமாக கிடப்பதை பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். உடனடியாக அங்கு அவசர மருத்துவக்குழு அனுப்பப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன. 

சம்பவத்தின் போது அப்பிள்ளைகளின் தாயார் வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 60 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4