10ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று : வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

#SriLanka #Election
Thamilini
1 year ago
10ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று : வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 

இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 13,421 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே எழுபத்து லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பதிவு செய்துள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளது மற்றும் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6081 ஆகும்.

இதற்கிடையில், 2034 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4