கனடாவில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் - 23 பேர் கைது
#Arrest
#Canada
#GunShoot
Prasu
4 months ago

கனடாவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சுமார் நூறு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட தாக கூறப்படும் 16 துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இசை பதிவு கூடம் ஒன்றிற்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாடப்பட்ட வாகனம் ஒன்றில் அந்த இடத்திற்கு சென்ற சிலர் வெளியே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



