பிரான்சின் வலதுசாரிக் கட்சித் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரும் வழக்கறிஞர்கள்

#France #Prison #parties #Lawyer
Prasu
10 hours ago
பிரான்சின் வலதுசாரிக் கட்சித் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரும் வழக்கறிஞர்கள்

தீவிர வலதுசாரி தலைவரான மரீன் லு பென்னுக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஐந்தாண்டு தடை விதிக்க வேண்டும் என்று அரசு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

Marine Le Pen மற்றும் 24 பேரும் ஐரோப்பிய ஒன்றிய நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு விசாரணையிலேயே சிறைத்தண்டனை மற்றும் அரசியலில் இருந்து தடை கோரி சட்டத்தரணிகள் முறையிட்டுள்ளனர்.

2027ல் Marine Le Pen நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகக் கூடும் என பெருவாரியான மக்கள் நம்பும் நிலையில், அவரது அரசியல் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது 300,000 யூரோ அபராதமும் ஐந்தாண்டுகள் சிறையும், அரசியல் செயல்பாடுகளுக்கு ஐந்தாண்டு தடையும் விதிக்க வேண்டும் என அரசு சட்டத்தரணிகள் முறையிட்டுள்ளனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்தால், Le Pen இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றே கூறப்படுகிறது.

ஆனால் அரசு சட்டத்தரணிகள் மூர்க்கத்தனமான கோரிக்கைகளை தமக்கு எதிராக முன்வைத்துள்ளதாக Le Pen குற்றஞ்சாட்டியுள்ளார். Marine Le Pen, அவரது கட்சி உட்பட 24 பேர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 கட்சி பொறுப்பாளர்கள், ஊழியர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டோருக்கு ஊதியம் வழங்க ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நிதியைப் பயன்படுத்தியுள்ளதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!