நடிகர் ரஜினிகாந்த்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தவெக நிர்வாகி!!

#India #Actor #rajini kanth #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
நடிகர் ரஜினிகாந்த்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தவெக நிர்வாகி!!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்னர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிரட்டல்கள் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலிலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. 

ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. தி.மு.க.வின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன். நான் சொல்லவந்த நோக்கம் வேறு. 

நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்கு வரவில்லை. 

ரஜினிகாந்த் அறிக்கை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என தெரிவித்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4