ரொறன்ரோவில் இருவருக்கு இடையே கத்தி குத்து தாக்குதல் - ஒருவர் பலி
#Death
#Canada
#Attack
#Knife
#Toronto
Prasu
4 months ago

ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் சிட்டி பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவத்தில் இருவரும் காயமடைந்திருந்தனர் எனவும் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



