சீனாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் மரணம்

#China #Death #fire #Building
Prasu
1 year ago
சீனாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் மரணம்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சாங்ஜியாஜி நகரின் சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2வது தளத்தில் 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

உடனடியாக தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!