உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா

#Death #Russia #Missile #Ukraine #War
Prasu
2 hours ago
உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது.

இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது.இந்த போரில் இரண்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வருவது போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைன் மீது 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியது.

உக்ரைனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி உட்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷியாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், சில ஏவுகணைகள், டிரோன்கள் இலக்குகளை தாக்கி அழித்தன.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததா முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் பெரும்பாலான எண்ணிக்கையில் சேதமடைந்தன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 கடந்த 3 மாதங்களில் ரஷியவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும் என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!