இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீட்டின் மீது தாக்குதல்
பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சேதம் ஏதும் பதிவாகவில்லை.
இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நேதன்யாகு வீட்டை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடக்கும்போது, நேதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.