ஜார்ஜியாவில் தலைமை தேர்தல் ஆணையர் மீது கருப்பு மை வீச்சு (காணொளி)

#Attack #Election Commission #officer
Prasu
1 year ago
ஜார்ஜியாவில் தலைமை தேர்தல் ஆணையர் மீது கருப்பு மை வீச்சு (காணொளி)

ரஷியவுக்கு நெருக்கமான நாடாக உள்ள ஜார்ஜியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. 

இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி 53.93 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளது. ஜார்ஜியா தலைநகர் திப்லிசில் உள்ள மத்திய தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாவிட் என்ற தலைவர் திடீரென அனைவர் முன்னிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி மீது கருப்பு மையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!