மூன்று நாட்களில் கங்குவா திரைப்படத்தின் வசூல்

#Actor #TamilCinema #Movie #Kollywood
Prasu
1 year ago
மூன்று நாட்களில் கங்குவா திரைப்படத்தின் வசூல்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது. முன்னதாக கங்குவா படம் குறித்து படக்குழு பல்வேறு தகவல்களை தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.

இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை பார்த்தவர்களில் பலர் படக்குழு எதிர்பார்த்த விமர்சனத்தை கொடுக்கவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

படத்தை பற்றி வேண்டுமென்றே அவதூறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை பதிவிட்டார்.

 இந்நிலையில் படத்தின் வசூலைக் குறித்து படக்குழு பதிவை பதிவிட்டுள்ளனர். மூன்று நாட்களில் திரைப்படம் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4