14 நாட்களுக்குள் பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற உத்தரவு!

#SriLanka #Jaffna
Mayoorikka
2 weeks ago
14 நாட்களுக்குள் பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற உத்தரவு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. 

 இதன்படி, எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

 இந்தநிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 இந்தநிலையிலேயே, மூவருக்குச் சொந்தமான காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!