திடீரென பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த பிக் பாஸ் பிரபலம் ஜூலி
#Actress
#TamilCinema
#wedding
#Bigg_Boss
Prasu
1 hour ago
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற மரிய ஜூலியானா தற்போது தனது திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
அந்தவகையில், ஜூலி தனது வருங்கால கணவருடன் சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
ஜூலியின் திருமணம் ஜனவரி 16, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை பரங்கிமலையில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
ஜூலி மணக்கவிருக்கும் நபரின் பெயர் முகமது இக்ரீம். இவர் ஒரு தொழிலதிபர். இவர்கள் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர்.
(வீடியோ இங்கே )