முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்ட கஜேந்திரகுமார்

#SriLanka #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 months ago
முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்ட   கஜேந்திரகுமார்

கடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நேற்று மாலை (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

 நவம்பர் 14ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ் , கிளிநொச்சி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  (19.11.2024) பிற்பகல் 12.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதனை தொடர்ந்து, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தி உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

images/content-image/2024/1732073045.jpg

 குறித்த அஞ்சலியின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

images/content-image/2024/1732073162.jpg


images/content-image/2024/1732073178.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!