பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று : தானம் செய்யப்பட்ட இரத்தங்கள் பரிசோதனையில்!
#SriLanka
Dhushanthini K
4 months ago

புதிதாக உருவாகி வரும் வைரஸ்கள் இங்கிலாந்தை அடையும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால், தானம் செய்யப்பட்ட இரத்தத்தை கண்காணிக்க புதிய எச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக இங்கிலாந்தில் தற்போது இல்லாத சில நோய்கள் எதிர்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
NHS Blood and Transplant (NHSBT) ஆராய்ச்சியாளர்கள், என்செபாலிடிஸ் வைரஸ் (TBEV), வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் உசுட்டு வைரஸ் ஆகியவை இரத்த தானம் செய்தவர்களின் மூலம் பிறருக்கும் பரவும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட இரத்தங்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



