தோல்வியுடன் ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்

#Player #Retire #Tennis
Prasu
21 hours ago
தோல்வியுடன் ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்

டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண் தரையில் கிங்காக விளங்கியவர். 

களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். 

மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். 38 வயதாகும் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. நடல் நெதர்லாந்தை சேர்ந்த போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்ப்-ஐ எதிர்கொண்டார். இதில் 4-6, 4-6 என நடால் தோல்வியடைந்தார்.

இதனால் தோல்வியுடன் அவருடைய 23 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் (மலாகா) கூடியிருந்த ரசிகர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்த நடாலுக்கு தோல்வி ஏற்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிறகு 29 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வெற்றி சராசரியில் சாதனைப்படைத்துள்ளார். தொழில்முறை டென்னிஸ் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். 

காயம் அவரை இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது. டேவிஸ் கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தேன். தற்போது கடைசி போட்டியில் தோல்வியடைந்துள்ளேன். 

ஆகவே, நாங்கள் வட்டத்தை முடித்துள்ளோம். என நடால் நகைச்சுவையாக தெரிவித்தார். ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளார். நடால் 22 பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!