இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்த IMF குழுவினர்!

#SriLanka #IMF
Dhushanthini K
4 hours ago
இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்த IMF குழுவினர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். 

 இந்த கலந்துரையாடல் இன்று (21) காலை நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் திரு.கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். 

 அங்கு, மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 

 சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை தயாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். 

 இதன்படி, இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

 கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபையானது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது. 

 மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 6.6 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்ட போதிலும், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இதன் காரணமாக புதிய பிரேரணையை தயாரித்து மீண்டும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!