பிரித்தானியா வில்ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு
பிரபல மருந்துசாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான முகப்பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டதாக நூற்றுக்கணக்கான பிரித்தானிய பெண்கள் நீதிமன்றம் செல்லத் தயாராகிவருகிறார்கள்.
உலக நாடுகள் பலவற்றில், குழந்தைகளுக்காக அவர்களுடைய தாய்மார்கள் நம்பிப் பயன்படுத்தும் தயாரிப்புகளில் ஒன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர் ஆகும்.
ஆனால், அந்த பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் என்னும் பொருள் இருப்பதால் அது புற்றுநோயை உருவாக்குவதாக அமெரிக்காவில் ஏராளமானோர் அந்நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
ஆகவே, சில நாடுகளில் குறிப்பிட்ட டால்கம் பவுடர் விற்பனை செய்வதை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்தியது.
இந்நிலையில், இனப்பெருக்க வயதில் இருக்கும், குழந்தை பெற முயற்சித்துக்கொண்டிருக்கும் இளம்பெண்கள் உட்பட பிரித்தானியர்கள் பலர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, 1,900 பேர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட, பிரித்தானியாவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்கள்.