மன்னார் கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் : சோதனையிட்டவர்களுக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Mannar
Dhushanthini K
4 hours ago
மன்னார் கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் : சோதனையிட்டவர்களுக்கு நேர்ந்தக் கதி!

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருள் வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த பகுதியில் இன்று (21.11) மதியம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவர் கடலில் மிதந்து வந்த பொதியை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்து சிதறியுள்ளது. 

இதில் படுகாயமடைந்த இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது - 37) மற்றும் ஏ. ஆரோக்கியநாதன் (வயது - 37) ஆகியோரே இவ்வாறு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது இருவரும் மேலதிக சிசிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்த போது குறித்த பொதி வெடித்துள்ளதாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்கு மூலம் வழங்கி உள்ளனர். 

 எனினும் மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்ற நிலையில் குறித்த மீனவர்கள் இருவரும் டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!