துலா ராசியினருக்கு தொழிலில் இருந்த போட்டி விலகி , எண்ணம் பூர்த்தியாகும் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரி எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். முயற்சி வெற்றியாகும்.பரணி: அலுவலகப் பணியில் உங்களுக்கு மதிப்புண்டாகும். வழக்கமான வேலைகளில் லாபம் உண்டாகும்.கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர். அவற்றை சாதுர்யமாக சமாளிப்பீர்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர். செல்வாக்கு உயரும்.ரோகிணி: வியாபாரத்தில் புதிய முதலீடு வேண்டாம். குடும்பத்தில் சிறு நெருக்கடி ஏற்பட்டு விலகும். முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது. திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். விமர்சனம் செய்தவர்கள் முன் உங்கள் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது.
கடகம்:
புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்திதரும்.பூசம்: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். நீங்கள் நினைத்தபடியே செயல் நடக்கும். புதிய வேலை இன்று வேண்டாம்.ஆயில்யம்: உங்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களை மற்றவர் செய்வர். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னையை சந்திப்பீர்.
சிம்மம்:
மகம்: வரவு செலவில் கவனம் தேவை. பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.பூரம்: வீண் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத செலவு தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடம் குறையும்.உத்திரம் 1: துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். முயற்சி வெற்றியாகும். நிதிநிலை உயரும். பழைய கடன் அடைபடும்.அஸ்தம்: போட்டிகளை சமாளிப்பீர். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தீரும்.சித்திரை 1,2: வரவேண்டிய பணம் வரும். உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
துலாம்:
சித்திரை 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர். உழைப்பிற்கேற்ற லாபம் காண்பீர்.சுவாதி: உங்கள் முயற்சியால் தேவை நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். நீங்கள் நினைத்ததை அடைவீர்.
விருச்சிகம்:
விசாகம் 4: தடை விலகும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். உறவுகளால் செயல் சாதகமாகும்.அனுஷம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.கேட்டை: நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும். சங்கடம் குறையும் நாள்
தனுசு:
மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். புதிய முயற்சியில் அக்கறை செலுத்துவது நல்லது.பூராடம்: உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையில் முடியும்.உத்திராடம் 1: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். செயல்களில் சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும்.திருவோணம்: நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். நினைத்தது நினைத்தபடி நடக்கும். பிறரின் ஆலோசனை நன்மை அளிக்கும்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வருவாயால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டுவீர்கள்.சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: வருவாய் அதிகரிக்கும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபமாகும். மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திரட்டாதி: உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுயதொழில் புரிவோருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடு வேண்டாம்.