டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை!
காசோலை நிதி மோசடி வழக்கு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
வெள்ளத்தைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தமது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்தும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கி நிதி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடளித்திருந்தார்.
இது தொடர்பாக அந்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தது நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர் தேவானந்தா ஆஜராகவில்லை.
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறிய போதிலும், கோரிக்கையை உறுதிப்படுத்தும் மருத்துவ ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அவர் ஆஜராகாததற்கு நம்பகமான நியாயம் இல்லாததால், தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை பிறப்பிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.