ஏலத்தில் 6.2 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழம்
சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது கலைப்படைப்படைப்புதான் இது.
அமெரிக்காவின் நியூயார்க் ஏல மையத்தில் சுவற்றில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.
இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டாலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார்.
இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும். இந்த ஏல விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பேசுபொருளாகியுள்ளது.
இந்த படைப்பை உருவாக்கிய கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.