கனடாவில் வாகன கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர்கள் கைது
#Arrest
#Canada
#Tamil
#Theft
#vehicle
Prasu
1 year ago
கனடாவில் கார் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிரம்டன் பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி முனையில் குறித்த bmw வாகனத்தை மடக்கி பிடித்து கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
33 வயதான அபிரா பொன்னய்யா, 19 வயதான காசீம் மொஹமட் மற்றும் 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி ஆகியோர் இந்த வாகனக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் வீடுடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.