கொவிட் காலத்தில் தடைப்பட்ட போக்குவரத்து சேவைகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆரம்பம்
#Covid 19
#France
Prasu
4 months ago

கடந்த கொவிட் 19 காலத்தின் போது இல் து பிரான்சுக்குள் சில தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் அவை மீண்டும் சேவைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு சில RER சேவைகளும், Transilien சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், 2024, டிசம்பர் 1 ஆம் திகதி முதல் அனைத்து சேவைகளும் மீள இயக்கப்படும் என Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
குறிப்பாக RER C மற்றும் RER E ஆகிய சேவைகள் அனைத்து நிலையங்களுக்கும் பயணிக்கவும், வழமையான நேர முகாமைத்துவத்தை பின்பற்றவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.



