சிம்ம ராசியினருக்கு தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: மகிழ்ச்சியான நாள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும். நெருக்கடி விலகும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயல்கள் லாபமாகும். வெளியூர் பயணம் லாபமாகும்.கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எதிர்ப்பு விலகும் நாள். செய்து வரும் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.ரோகிணி: வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: குழப்பம் தவிர்க்க வேண்டிய நாள். எதிர்பார்த்த வருவாய் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலைகளில் தடை தோன்றினாலும் முடிவு சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: முயற்சிக்கேற்ற வருவாய் வரும். பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு மறையும்.
கடகம்:
புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்பு உண்டாகும். குடும்ப நெருக்கடி விலகும்.பூசம்: செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். திடீர் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர்.
சிம்மம்:
மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர்களை அறிவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். சகோதரர்களால் லாபம் காண்பீர்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து வெற்றி பெறுவீர். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கவனம் அவசியம். எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு செலவில் கவனம் தேவை.
துலாம்:
சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.விசாகம் 1,2,3: செல்வாக்கு வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர். நேற்றைய எண்ணம் இன்று பூர்த்தியாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். செலவு வழியே நினைத்ததை சாதிப்பீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். செல்வாக்கு உயரும்.அனுஷம்: வாகன வகையில் செலவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நெருக்கடி ஏற்படாமல் போகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமாக செயல்படுவதும் அவசியம்.
தனுசு:
மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். தேங்கிய பொருட்கள் விற்பனையாகும். பழைய கடன் தீரும்.உத்திராடம் 1: தடைபட்ட வேலை நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: வியாரத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். புதிய முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் செயல் லாபமாகும்.அவிட்டம் 1,2: உங்கள் அனுகு முறையால் நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி வெற்றியாகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தந்தை வழி உறவுகளால் லாபம் ஏற்படும்.சதயம்: உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பெரியோர் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலை நடந்தேறும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சியில் தடை ஏற்பட்டாலும் நினைத்ததை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மனக்குழப்பம் அதிகரிக்கும். விருப்பம் இழுபறியாகும்.ரேவதி: பணிபுரியும் இடத்தில் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதுடன் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.