மார்பகப் புற்றுநோய்! அறிகுறிகள் என்ன?
மிகவும் பொதுவான மார்பக புற்றுநோய்க்குரிய அறிகுறி உங்கள் மார்பகத்திலோ அல்லது உங்கள் அக்குளிலோ ஒரு கட்டி காணப்படுவதாகும்.
மற்றைய விடயங்களும் கட்டிகளை ஏற்படுத்தும், எனவே ஒன்றைக் கண்டறிவது உங்களுக்கு நிச்சயமாக புற்றுநோய் இருப்பதாக அர்த்தமல்ல. ஆனாலும் ஏதேனும் கட்டிகளை நீங்கள் கண்டறிந்தால் பரிசோனை செய்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
உங்கள் மார்பகத்தில் வீக்கம் ஏற்படல்
உங்கள் மார்பகத்தின் மேற்பரப்பில் பள்ளங்கள் காணப்படல்
உங்கள் மார்பகம் அல்லது முலைக்காம்பில் வலி ஏற்படல்
முலைக்காம்புகள் வெளியே ஒட்டாமல் உள்நோக்கித் திரும்புதல்
உங்கள் மார்பகம் அல்லது முலைக்காம்பு மீது தோல் நிறம் மாறுதல்,
சீரற்றதாக, செதில்களாக அல்லது இயல்பை விட தடினமாக இருக்கும்.
உங்கள் முலைக்காம்புகளின் ஊடாக வெளியேற்றம் அல்லது இரத்தம் வருதல்
மார்பகப் புற்றுநோயானது, நோய் அதிகமாக உருவாகும் வரை குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாமல் இருப்பதும் சாத்தியமாகும்.