03 ரயில் நிறுவனங்களை மீண்டும் தேசிய மயமாக்கும் பிரித்தானியா!
பிரித்தானியாவில் வரும் 2025 ஆம் ஆண்டு 03 ரயில் நிறுவனங்கள் மீண்டும் தேசியமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தென்மேற்கு ரயில்வே மே 2025-லும், C2C ஜூலை 2025-லும், கிரேட்டர் ஆங்கிலியா இலையுதிர் காலத்திலும் தேசியமயமாக்கப்படும் என போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ரயில் ஆப்ரேட்டர்களின் ஒப்பந்தங்கள் நிறைவடையும் நிலையில், சேவைகளை தேசியமயமாக்கும் தொழிலாளர் கட்சியன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் (பொது உரிமை) சட்டம் ரயில் ஒப்பந்தங்களை ஐந்தாண்டுகளில் மீண்டும் பொது உடைமையாக்கும் கோட்பாடுகளை முன்வைக்கின்றது.
தற்போது தனியார் நிறுவனங்கள் வைத்திருக்கும் சேவை ஒப்பந்தங்கள் வரும் ஆண்டுகளில் காலாவதியாகும் நிலையில், கிரேட் பிரிட்டிஷ் ரயில்வே (ஜிபிஆர்) என்ற புதிய அமைப்பு ஒன்றையும் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.