கனடாவில் வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : நாளொன்றுக்கு $200K அபராதம் விதிக்க தயாராகும் அரசு!

5 ஆண்டுகள் பொது அமைப்பில் இருக்க மறுக்கும் கியூபெக் மருத்துவர்களுக்கு நாள் ஒன்றுக்கு $200K அபராதம் விதிக்கப்படும் திட்டத்தை கனேடிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கியூபெக்கின் சுகாதார அமைச்சர், மாகாணத்தில் பயிற்சி பெற்ற புதிய மருத்துவர்கள், தங்கள் பணியின் முதல் ஐந்து ஆண்டுகளை கியூபெக்கின் பொது சுகாதார வலையமைப்பில் பணியாற்ற கட்டாயப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த காலத்திற்குள் தனியார் துறையில் நுழையும் அல்லது மாகாணத்திற்கு வெளியே செல்லும் மருத்துவர்களுக்கு நாளொன்றுக்கு $200,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே, பொது அமைப்பை விட்டு தனியாருக்குச் செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த மசோதா தடுப்பதாக கூறியுள்ளார்.
ஒரு புதிய மருத்துவரைப் பயிற்றுவிப்பதற்காக அரசாங்கத்திற்கு மொத்தமாக $435,000 முதல் $790,000 வரை செலவாகும் என்று கூறிய அவர், தங்களது படிப்பிற்காக பணம் செலுத்தியவர்களுக்கு கடமையாற்றுவது அவர்களின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.



