இங்கிலாந்து முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு : 80 மைல் வேகத்தில் வீசும் காற்று!

#SriLanka #weather
Dhushanthini K
2 weeks ago
இங்கிலாந்து முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு : 80 மைல் வேகத்தில் வீசும் காற்று!

இங்கிலாந்து முழுவதும் சீரற்ற வானிலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

இதன்படி அடுத்த சில நாட்களில் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் நாடு முழுவதும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர். 

வடக்கு மற்றும் வடமேற்கு ஸ்காட்லாந்தின் சில இடங்களில் மணிக்கு 65-75 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், ரயில் சேவைகள் தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்காட்லாந்து, வடக்கு வேல்ஸ், வடக்கு இங்கிலாந்து, வடக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் கிழக்கு ஆங்கிலியா பகுதிகள் முழுவதும் மணிக்கு 40-50 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இந்த எச்சரிக்கைகள் இன்று (05.12) மதியம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!