லண்டனில் தனுஷுடன் 7வது ஆண்டு நீரிழிவு நடைப் பயணம்!
நீரிழிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் லண்டனில் நடை பயணம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த நடை பயணத்தில் தென்னிந்திய பிரபல நடிகர் தனுஷ் இணைந்து கொள்ளவுள்ளார்.
சில்வர் ஸ்டார் நிரிழிவு நோய் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வினை முன்னிடிட்டு தனுஷை கௌரவிக்கும் வகையில் லண்டன் சரவண பவனில் எதிர்வரும் 7ஆம் திகதி மதியம் 1.30 மணிக்கு மதிய விருந்துபசார சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதில் நீங்கள் தனுஷை சந்திக்க விரும்பினால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் தனுஷை சந்திப்பதற்ககு 250 பவுன்ஸ் அறவிடப்படுகின்றது. இந்த நீதியானது நீரிழிவு நோயாளர்களுக்கு அவர்களுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்
சில்வர் ஸ்டார் நீரிழிவு அமைப்பானது ஐக்கிய ராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மூலம் இந்தியா, பங்களாதேஷ், மொராக்கோ மற்றும் துனிசியாவில் நிரிழிவு நோயாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் 4.9 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 5.5 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வர் ஸ்டார் நீரிழிவு நோய் 68,000 நபர்களுக்கு நீரிழிவு நோயை பரிசோதித்துள்ளது.