பாரிஸில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

#Arrest #Weapons #drugs #Paris
Prasu
1 year ago
பாரிஸில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

15 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிச்சன்னங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைநகர் பரிசில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றுக்கு வழமைக்கு அதிகமாக பலர் வந்துபோவதை அவதானித்த சிலர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளர்.

சம்பவம் தொடர்பில் ஆராய, குறித்த வீட்டின் கதவு பதியும்படியும், வீட்டைச் சுற்றியும் பல கண்காணிப்பு கமராக்களை காவல்துறையினர் பொருத்தினர். 

பின்னர் அதனை அவதானித்ததில், குறித்த வீட்டில் இருந்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவது நிரூபனமானது. உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு, குறித்த வீடு சோதனையிடப்பட்டது. 

26 வயதுடைய இளம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 15 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள், 7.62 Tokarev caliber துப்பாக்கிச்சன்னங்கள் 100 உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4