12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Weekly-Rasipalan
Prasu
1 month ago
12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார ராசிபலன்

மேஷம்

கேது, புதன், சனி நன்மைகளை வழங்குவர். விநாயகரை வழிபட நினைப்பது நிறைவேறும்.அசுவினி: ஆறாமிட கேதுவால் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 

தடைபட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் தோன்றிய தடை நீங்கும்.பரணி: அதிர்ஷ்டக்காரகன் சுக்ரன் செவ்வாய்க்கிழமை வரை உங்களுக்கு யோகத்தை வழங்குவார். 

சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: சூரியன் மறைந்தாலும், கேது, புதன், சனி சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

மறைந்திருந்த திறமை வெளிப்படும். முடங்கியிருந்த தொழில் இயங்கும். எதிர்ப்பு விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். லட்சுமி நரசிம்மரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: சோர்ந்து இருந்தவர்களும் சுறு சுறுப்பாக செயல்படுவீர். தடைபட்டிருந்த வேலை நடக்கும். 

அரசு வழி முயற்சி லாபமாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு என வாங்குவீர்.ரோகிணி: புதன், வியாழனில் செலவுகள் அதிகரிக்கும். சுக்ரன் சஞ்சாரத்தினால் வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். இழுபறியாக இருந்த விவகாரத்தில் முடிவு ஏற்படும். 

வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.மிருகசீரிடம் 1,2: ராகுவும், சுக்ரனும் உங்கள் செயல்களை வெற்றியாக்குவர். வியாபாரம், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வேலையில் உயர்வு உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

மிதுனம்

சூரியன், புதன், சனி நன்மைகளை வழங்குவர். விஷ்ணு துர்கையை வழிபட நன்மைகள் ஏற்படும்.மிருகசீரிடம் 3,4: யோகமான வாரம் இது. சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்னை காணாமல் போகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும். 

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.திருவாதிரை: புதன், சூரியன், ராகு கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். 

உங்கள் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: அதிர்ஷ்டமான வாரம் இது. வழக்கத்தை விட உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலையை முடிக்கும் நோக்கில் செயல்படுவீர். அரசுவழி முயற்சிகள் ஆதாயமாகும். வருமானம் அதிகரிக்கும். 

நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். வெள்ளிக்கிழமை அமைதி காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 4.12.2024 இரவு 11:41 மணி - 7.12.2024 அதிகாலை 4:27 மணி

கடகம்

கேது நன்மை வழங்குவார். தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.புனர்பூசம் 4: உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். 

சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது சிறப்பு.பூசம்: கேதுவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். சனி ஞாயிறில் அனைத்திலும் கவனம் தேவை.

ஆயில்யம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சூரியன் சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் தேவை. ஒரு சிலருக்கு தேவையற்ற பழிச்சொல் உண்டாகும். செய்து வரும் தொழிலில் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிக்கவும். 

ஞாயிறு திங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 7.12.2024 அதிகாலை 4:28 மணி - 9.12.2024 காலை 7:36 மணி

சிம்மம்

புதன் நன்மை வழங்குவார். அதிகாலையில் சூரியனை வழிபடுவதால் சங்கடம் நீங்கும்.மகம்: வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும். வரவு செலவில் கவனமாக இருப்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் நன்மையாகும்.

இழுபறியான வேலைகள் உங்கள் முயற்சியால் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். திங்கள்கிழமை செயல்களில் கவனம் தேவை.பூரம்: புத்தி சாலித்தனத்தால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். 

பொருளாதார நிலை சீராகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் பொறுமை தேவை.உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும் வாரம் இது. எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 

நினைத்தது நிறைவேறும். தடைபட்ட வருமானம் வரும். நேற்று நெருக்கடியை ஏற்படுத்தி வந்த பிரச்னை விலகும். புதன்கிழமை நிதானம் அவசியம்.சந்திராஷ்டமம்: 9.12.2024 காலை 7:37 மணி - 11.12.2024 காலை 10:00 மணி

கன்னி

சூரியன், சுக்கிரன், சனி நன்மைகளை வழங்குவர். துர்கையை வழிபட, வேண்டுதல் நிறைவேறும்.உத்திரம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் வாரம் இது. சூரியனால் உங்கள் நிலை உயரும். 

எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதன்கிழமை செயல்களில் பொறுமை தேவை.அஸ்தம்: அதிர்ஷ்டமான வாரம் இது. சனி பகவானால் நெருக்கடி நீங்கும். 

எதிர்பார்த்த வரவு வரும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். தொழிலில் ஏற்பட்ட சிக்கல் முடிவிற்கு வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: சூரியன், சுக்கிரன், சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் உங்கள் வேலைகளில் வேகம் இருக்கும். 

இழுபறியாக இருந்த வேலைகளை விறுவிறுவென நடக்கும். முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும்.சந்திராஷ்டமம்: 11.12.2024 காலை 10:01 மணி - 13.12.2024 மதியம் 12:33 மணி

துலாம்

புதன், சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சித்திரை 3,4: நீங்கள் செய்துவரும் தொழிலில் கவனமாக இருப்பது அவசியம். புதிய முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிக்கவும். 

புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.சுவாதி: ராகுவால் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். 

அலுவலர்கள், பணியாளர்கள்,எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். போட்டியாளர்கள் விலகுவர்.விசாகம் 1,2,3: குரு வக்ரம் அடைந்திருப்பதால் அனைத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. 

புதன், சுக்ரன், ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். ஆற்றல் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த வேலை நடக்கும்.

விருச்சிகம்

புதன், சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.விசாகம் 4: சூரிய பகவானால் எடுத்த வேலையை முடிக்கும் எண்ணம் உண்டாகும். 

குரு வக்ரம் அடைந்திருப்பதால் எந்தவொரு வேலையிலும் பின் விளைவுகள், லாப நஷ்டம் பற்றி யோசிக்காமல் செயல்பட வேண்டாம். அனுஷம்: அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் வேலை பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். சுக்கிரனும், கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். நெருக்கடிகளை நீக்குவர்.

கேட்டை: புதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பயணம் ஏற்படும். அதன் வழியே ஆதாயம் உண்டாகும். கேதுவால் தொழிலில் லாபம் காண்பீர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

சுக்கிரன், சனி நன்மைகளை வழங்குவர் தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.மூலம்: மூன்றாமிடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். 

மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம் இது. பூராடம்: அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சார நிலையால் நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சனி ஆட்சி பலம் பெற்றிருப்பதால் முயற்சி வெற்றியாகும். 

உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் நிதானம் தேவை. செலவுகளில் எச்சரிக்கை அவசியம். அதே நேரத்தில் சுக்கிரனும் சனியும் சங்கடங்களை நீக்குவர். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து வைப்பர். தொழில் முன்னேற்றமடையும்.

மகரம்

ராகு, சூரியன், புதன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் 2,3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். 

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழி வேலைகள் நிறைவேறும்.திருவோணம்: ராகு, சூரியன், புதன், உங்கள் நிலையை உயர்த்துவர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். 

எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் வக்ரம், தன, குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனம் வேண்டும். என்றாலும், சூரியன், புதன், சுக்கிரன், ராகு என்று போட்டி போட்டு உங்களுக்கு நன்மைகளை வழங்குவர். ஆதாயம் அதிகரிக்கும்.

கும்பம்

சூரியன், புதன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: ராசிக்குள் சனி சஞ்சரிப்பதால் நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சூரியன் உங்கள் வாழ்க்கைக்கு புதிய வழியைக் காட்டுவார். 

வியாபாரம், தொழில் விருத்தியாகும்.சதயம்: ராகுவினால் வார்த்தைகளில் நிதானம் தேவை. பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதனால் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். வேலைக்காக முயற்சித்தவர்கள் கனவு நனவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். 

ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பூரட்டாதி 1,2,3: சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சார நிலைகளால் செல்வாக்கு உயரும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலை மாறும். என்றாலும் ராசிக்குள் சனி சஞ்சரிப்பதால் தவறான வழிகளை விட்டு நேர்மையாக செயல்படுவது நல்லது.

மீனம்

சுக்கிரன், சந்திரன் நன்மையை வழங்குவர். பைரவரை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். 

ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலால் சட்ட ரீதியான நெருக்கடிக்கும் ஆளாவீர்.உத்திரட்டாதி: ராசிநாதன் வக்ரம், விரய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி நெருக்கடிக்கு ஆளாவீர். அரசு பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. 

புதிய முயற்சி இப்போது வேண்டாம்.ரேவதி: யோசித்து செயல்பட வேண்டிய வாரமிது. புதனால் நிதானமில்லாமல் சில வேலைகளில் ஈடுபட்டு ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் அவதிப்படுவீர். நெருக்கடிக்கு ஆளாவீர். சுக்கிரன் உங்கள் தேவைக்கேற்ற வரவை வழங்குவார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!