சாட் நாட்டில் இருந்து தனது படைகளை திரும்ப பெறும் பணியை தொடங்கிய பிரான்ஸ்

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டில் இருந்து பிரான்ஸ் ராணுவம் வெளியேறிவருகிறது.
சாட் நாட்டில் இருந்து தனது படைகளை திரும்ப பெறும் பணியை பிரான்ஸ் தொடங்கியுள்ளது.
நாட்டின் தலைநகர் என்'ஜமேனாவில் நிலைகொண்டிருந்த இரண்டு போர் விமானங்கள் வெளியேறியதன் மூலம் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் இராணுவம் தெரிவித்தது.
சாட் அரசு கடந்த நவம்பர் 28-ஆம் திகதி பிரான்ஸுடன் இருந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. சாட் நாட்டில் தற்போது 1,000 பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர், ஆனால் அவர்களின் திரும்பப் பெறல் தொடர்பான கால அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நடவடிக்கையை முடிக்க பல வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் படைகள் முழுமையாக நாட்டு தளங்களை விட்டுவிடும் வரை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக தகவல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



