உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 9 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Numerology
Prasu
3 months ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 9 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

9, 18, 27, ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் 9ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார். 

அதே போல, முழுமையான பிறந்த தேதியின் கூட்டு எண் 9 என்று வந்தாலும், அவர் 9 ஆம் எண்ணின் ஆதிகத்தில் பிறந்தவர்கள் என்று எண் கணித ஜோதிடர்கள் கூறுவார்கள். ஜோதிடத்தின் பிரிவுகளில் ஒன்றுதான் எண் கணித ஜோதிடம். 

பிறந்த தேதி மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில் எண் கணித ஜோதிடம் என்று சொல்லப்படும் நியூமராலாஜி செயல்படும். இதில் 1 - 9 வரை ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மை உள்ளது. 

9 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் யார்?

9, 18, 27, ஆகிய மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் 9ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார். அதே போல, முழுமையான பிறந்த தேதியின் கூட்டு எண் 9 என்று வந்தாலும், அவர் 9 ஆம் எண்ணின் ஆதிகத்தில் பிறந்தவர்கள் என்று எண் கணித ஜோதிடர்கள் கூறுவார்கள்.

9ஆம் எண்ணில் பிறந்தவர்களின் அடிப்படை குணங்கள் 

9ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள், கோபம், அதீதமான மன நிலை, ஆதிக்கம், போட்டித்தன்மை உள்ளிட்ட குணங்கள் கொண்ட மனிதர்களாக அறியப்படுவார்கள். 

பேச்சு கடுமையாக இருக்கும், கோபம் இவர்களை கண்ணை மறைக்கும் அளவுக்கு சில நேரம் நடந்து கொள்வார்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். 

இவர்கள் மிகவும் கடினமாக உழைப்பவர்கள், பிடிவாதம் அதிகம், தன்னுடைய முடிவில் இருந்து மாற மாட்டார்கள், மற்றவர்கள் சொல்வதை பெரும்பாலும் கேட்க மாட்டார்கள்.

செவ்வாய் என்பது அதிக ஆற்றலும், வேகமும், அதிக சக்தியும் கொண்ட கிரகமாகக் கருதபப்டுகிறது. எதையும் முழுமையாக ஆழமாகக் கற்றுக் கொள்வார்கள். 

இலக்கை நிர்ணயித்தால், அடையாமல் முயற்சியை கைவிட மாட்டார்கள். வாழ்வை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள், பெரும்பாலும் உற்சாகமாக இருப்பர்கள். கவனம் சிதறாது, நேரம் தவறாமல் இருப்பது, பொறுப்பு ஆகியவை அதிகம்.

எதிர்பாலின ஈர்ப்பு அதிகம். ஆதிக்கம் செலுத்தினாலும் பாசமாக இருப்பார்கள். பொதுவாக மற்ற எண்களின் ஆதிகத்தில் பிறந்தவர்களை விட, ஒன்பதாம் எண்ணின் ஆதிக்கத்தில் செவ்வாய் அம்சத்துடன் பிறந்தவர்கள் அதீதமான கோபமும், அதிக ஆற்றலும், கொண்டரவாக இருப்பார்கள்.

எண் 9 இன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பலம்

மனதில் நினைப்பதை பேசுவார்கள்

தன்னம்பிக்கை அதிகம்

மிகவும் கடினமாக உழைப்பவர்கள்

ஆற்றல் மிக்கவர்கள்

குறிக்கோளை அடையாமல் விட மாட்டார்கள்

அன்பும் பாசமும் அதிகம் இருக்கும்

செய்யும் வேலையை கச்சிதமாக செய்வார்கள்

எண் 9 இன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பலவீனம்

வளைந்து கொடுக்கும் தன்மை கிடையாது

அதிக பிடிவாதம்

வார்த்தைகள் காயப்படுத்தும்

மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள்

எதிர்பாலினம் என்பது இவர்களின் பலவீனம்

அன்பாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள்

எண் 9 இன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு / தொழில் துறை

9 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் குண நலன்களுக்கு, காவல் துறை, தீயணைப்பு, ரசாயனம், உணவு, விளையாட்டு மற்றும் ராணுவம் போன்ற துறைகள் மிகச்சிறந்த துறையாக அமையும். 

அதே போல, மிகவும் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு செவ்வாயின் ஆதிக்கம் இருக்கும். மேலும், ரியல் எஸ்டேட், கமிஷன் உள்ளிட்டவையில் பெரிய லாபமும், முன்னேற்றமும் பெறலாம்.

எண் 9 இன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை

ராசியான நிறம்: சிவப்பு, பிங்க்

ராசியான கிழமை: செவ்வாய்

 ராசியான இரத்தினக்கல்: நீல சஃபையர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!