ஏனையோரை விமர்சித்த ஜேவிபி தனது உறுப்பிர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுப்பார்கள்?

#SriLanka #Parliament
Mayoorikka
2 months ago
ஏனையோரை விமர்சித்த ஜேவிபி தனது உறுப்பிர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுப்பார்கள்?

சபாநாயகர் அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார் அதே போன்று மேலும் பல சிரேஷ்ட ஜேவிபி உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக இருக்கின்றதாக அறிய முடிகின்றது. 

 அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடைவிலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்

 BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது 

 அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள் 

 ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார் 

 அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது 

 அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

 According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council.

 அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை கலாநிதி என சில இடங்களில் அடையாளப்படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது 

 பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது

 Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC).

 கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 கல்வி மட்டும் போதாது; பொது பிரதிநிதிகள் ஒருமைப்பாடு மற்றும் வலுவான நெறிமுறை தரங்களை நிலைநிறுத்த வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பொய் அவர்களை அதிகாரப் பதவிகளில் இருப்பதற்கு முற்றிலும் தகுதியற்றதாக்குகிறது. அவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!