பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு

#Refugee #England #Rescue
Prasu
4 months ago
பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு

பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலக் கால்வாயூடாக பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். நோர் மற்றும் பா-து-கலே மாவட்டங்களின் கடற்பிராந்தியம் வழியாக பல்வேறு சட்டவிரோத பயணங்கள் இடம்பெற்றன.

முதலாவது படகு 52 பேரை ஏற்றியவாறு பயணித்த நிலையில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அகதிகள் கடலில் தத்தளிக்க தொடங்கினர். அவர்களை CROSS Gris-Nez அமைப்பினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இரண்டாவது படகில் 64 பேர் பயணித்த நிலையில், அவர்களது படகும் இயந்திரக்கோளாறுக்குள் சிக்கி, கடலில் தவித்து நிற்கத்தொடங்கினர். அவர்களையும் CROSS Gris-Nez அதிகாரிகள் மீட்டனர்.

 இந்த சட்டவிரோத கடற்பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!