உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 11 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

எண் 1 இரண்டு முறை வந்து எண் 2 க வருவதை இந்த எண் உணர்த்துகிறது. சக்தி -சிவம், ஆண் - பெண், ஞானம் - அஞ்ஞானம், தரித்திரம் - சம்பத்து, சுகம் - துக்கம் , உயர்வு - தாழ்வு வடதுருவம் -தென்துருவம் என்று தத்துவங்கள் இரண்டாக காணபடுகிறது.
சூரியனின் ஆதிக்க எண்களின் மூலம் (1+ 1= 2)என்று சந்திரனின் ஆதிக்க தன்மையை உணர்த்துகிறது.
சாமர யோகமுள்ள எண் இது. மன வலிமை உடல் வலிமை தன்னம்பிக்கையை தரக்கூடியது இது அதிக சோதனைகளை தரக்கூடியது உடலில் உஷ்ண நோய் புத்தி பலம் குறைதல் போன்றவற்றை காணலாம்.
சோதனைகளை வென்று வெற்றி அடைவது என்பது மிகவும் சிரமம். நட்பு கூட்டு ஒப்பந்த வகைகளில் சமாளிக்கும்படி அளவு கடந்த சோதனைகள் வஞ்சக மனிதர்களால் ஏற்படும். தெய்வ நம்பிக்கை மிக அதிகமாக ஏற்பட்டு அதன் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாகக்கூடும்.
சோதனைகளை வென்று வெற்றி அடைவது என்பது மிகவும் சிரமம் .பொருளாதார துறையில் பிரமாதமான முன்னேற்றம் எதிர்பார்ப்பதற்கில்லை.
பலவிதமான சோதனைகளால் ஆபத்துக்கள் வரும்போதெல்லாம் ஆன்மீக நம்பிக்கையால் வென்று பலவித லாபங்களையும் சுலபமாக அடைய சந்தர்ப்பம் உதவி புரியும். தலைமை பதவியை இந்த எண் பெற்று தரும்.
மலட்டு தன்மை நீங்கி புத்திர பாக்கியம் பெறுதல் என்பது இந்த 11 ம் எண்ணிற்கான விசேஷ சக்திகள் ஆகும்.
7 16 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த எண விசேஷ பலன்களை வழங்கும். 9 18 27 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த எண் கெடுதலான பலன்களை இந்த எண் கொடுக்கும்.



