பிரான்ஸ் அகதிகள் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் மரணம்
#Death
#France
#Refugee
#GunShoot
#Camp
Prasu
3 months ago

பிரான்ஸின் Dunkerque மாவட்டத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் Loon-Plage எனும் சிறு நகர்ப்பகுதியில் உள்ள அகதி முகாமுக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
அகதி ஒருவர் ஆயுதத்துடன் வந்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஆயுததாரி முன்னதாக ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் எனவும், அவரே தற்போது இந்த கொலைகளையும் மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



