கனடாவின் முன்னணி வங்கிகளில் இடம்பெற்ற பாரிய மோசடி : மில்லியன் டொலர்கள் அபராதம் விதிப்பு!

#SriLanka #Canada #Bank
Dhushanthini K
3 months ago
கனடாவின் முன்னணி வங்கிகளில் இடம்பெற்ற பாரிய மோசடி : மில்லியன் டொலர்கள் அபராதம் விதிப்பு!

கனடாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எக்ஸ்சேஞ்ச் வங்கிக்கு, பணமோசடி சட்டத்தை பின்பற்றாததற்காக அந்நாட்டின் நிதிப் புலனாய்வு நிறுவனம் 2.46 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அறிக்கைகள் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் கனடாவின் நிதிப் புலனாய்வு நிறுவனம் இந்த அபராதத்தை விதித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கைகளை சமர்பிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருந்தபோதிலும், வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறியதாக கனடாவின் எக்ஸ்சேஞ்ச் வங்கியானது அறிக்கை வெளிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நிதி நடவடிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் கனடா பணமோசடி சட்டங்களை அமுல்படுத்துவதில்லை எனவும் இந்த நிலை காரணமாக கனடா குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் பணமோசடி செய்யும் சொர்க்க பூமியாக மாறியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

2008 மற்றும் 2018 க்கு இடையில், டொராண்டோவில் பணமோசடி முகவர் நிலையங்கள் மூலம் 28 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 10 பில்லியன் டொலர்கள் ரியல் எஸ்டேட்டில் காசோலைகளாக அல்லாமல் பணமாகவே செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!