மாயோட் தீவை தாக்கிய சிடோ சூறாவளி - மீட்டெடுக்க €800 மில்லியன் தேவை

Mayotte தீவினை Chido சூறாவளி சூறையாடிச் சென்றத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சேத விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. Mayotte தீவுக்கூட்டத்தினை மீட்டெடுக்க 650 தொடக்கம் 800 மில்லியன் யூரோக்கள் வரை தேவை என பிரெஞ்சு பொது காப்பீட்டு நிறுவனமான Caisse Centrale de Réassurance அறிவித்துள்ளது.
அதேவேளை, அங்கு பயணித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று காலை முதல் உள்ளூர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், மருத்துவக்குழுவினர் என தொடர் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
Mayotte தீவினை மீட்டெடுப்பதற்கு ஒரு சிறப்புச் சட்டம் ஒன்றை பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் கொண்டுவருவேன் எனவும் ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்தார்.
அதேவேளை, பிரான்ஸ் முழுவதிலும் இருந்து Mayotte தீவுக்கான நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இல் து பிரான்ஸ் மாகாணசபை 500,000 யூரோக்கள் நன்கொடை வழங்கியுள்ளது.
இன்று விமான சேவைகளின் ஒரு பகுதி ஆரம்பமாகியுள்ளதாகவும், சனிக்கிழமையில் இருந்து முற்று முழுதாக அனைத்து விமானங்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



