பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் உடலுறவு பிரச்சினைகள்

#Health #Sex #Lanka4
Prasu
1 month ago
பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் உடலுறவு பிரச்சினைகள்

பக்கவாதம் ஏற்பட்ட பிறகு உடலுறவு குறித்துப் பேசுவது உங்களுக்கு கடினமானதாக இருக்கலாம். 

உங்கள் உடல் மற்றும் உங்கள் உறவாளருடனான உறவுமுறை குறித்து நீங்கள் உணரும் விதத்தைப் பக்கவாதம் மாற்றலாம். பக்கவாதத்திற்குப் பிறகு உங்களுக்கு உடலுறவுப் பிரச்சினைகள் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

உணர்ச்சி மாற்றங்கள்

பக்கவாதத்திற்குப் பிறகு மந்தமான மனநிலை, மன அழுத்தம், உடலுறவில் ஆர்வமிழப்பு, நெருக்கமின்மை ஆகியவை ஏற்படுவது பொதுவானதே. சிலர் தங்களின் உடலுறவு ஆர்வத்தை அடக்க சிரமப்பட்டு அதை கோபம் எரிச்சல் வழியாக வெளிப்படுத்தக்கூடும்.

உறவுமுறை பிரச்சினைகள்

பக்கவாதம் ஒருவரது வாழ்க்கையை மாற்றும் நிகழ்வு ஆகும்.பக்கவாதத்திற்கு பின்னர் எற்படும் பொறுப்பு மாற்றங்கள், வாழ்க்கைத் துணையுடனான உறவை பாதிக்கலாம்.

உதாரமாக ஒருவரது வாழ்க்கை துணையே அவரது பராமரிப்பாளராக மாறும் போது உறவின் சமநிலையை பாதிக்கலாம்.

பக்கவாதம் உங்கள் தன்னம்பிக்கையையும், சுய-மரியாதையையும் பாதிக்கலாம். தேவையற்ற குழப்பம் ஏற்படுமோ என்ற பயத்தில், உங்கள் உணர்வுகளை உங்கள் அன்பருடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் ஏற்ப்படலாம்.

உடல்ரீதியான மாற்றங்கள்

தசை பலவீனம், தசை இறுக்கம் உடலுறவில் உங்கள் நிலையையும், அசையும் விதத்தையும் பாதிக்கலாம். 

இது உடலுறவின் இன்பத்தை குறைக்கக்கூடும். உணர்வின்மை அல்லது ஊசி குத்துவதைப்போன்ற உணர்வு, உங்கள் தொடு உணர்ச்சியை குறைக்கக்கூடும்.

மாறுபட்ட உணர்வு, உடல்ரீதியான சோர்வு ஆகியவை உங்களை மகிழ்விக்கும் பல செயல்களில் ஈடுபடுவதை பாதிக்கக்கூடும். சிறுநீர் மற்றும் மலத்தைக் கட்டுப்படுத்துவதில் இயலாமையால் நீங்கள் உடலுறவை தவிர்க்கக்கூடும். 

பயம்

மீண்டும் உடலுறவில் ஈடுபடுவதில் பயம் : பக்கவாதத்திற்கு பின்னர் தம்பதிகளுக்கு பாலுறவில் ஈடுபட சொல்லொனா பயம் ஏற்படலாம், இது அவர்களின் நெருக்கத்தை பாதிக்கக்கூடும். 

பாலியல் நடவடிக்கைகளால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. உடலுறவின் போது உங்கள் இதயம் வேகமாகத் துடிப்பதும், இரத்த அழுத்தம் அதிகரிப்பதும் வழக்கமானதே.

உடல் உருவ மாற்றத்தின் பொருட்டு உடல் உறவுக்கு நீங்கள் தகுதியற்றவர், என்று தனிமையில் வருந்த வேண்டாம். 

உங்கள் உறவாளருடன் உடல் நெருக்கத்தின் பொது செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து வெளிப்படையாக கலந்துரையாடி இதற்கு தீர்வு காணலாம்.

பாலியல் ரீதியான செயலிழப்பு

பக்கவாதம் கைகால்களில்களில் பலவீனத்தை ஏற்படுத்தும் அதே முறையில் பாலியல் ரீதியான செயலிழப்பையும் விளைவிக்கலாம். 

பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile dysfunction – ED), குறைவான பாலியல் விருப்பம் ஆகியவை ஹார்மோன் சார்ந்த சமநிலையின்மையின் காரணமாக இருக்கலாம். 

ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ஒரு பகுதி சேதமடைவதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இது பாலியல் விருப்பத்தையும், சுயகௌரவத்தையும் பாதிக்கக்கூடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!