லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்த ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு 40 நிமிடங்களே ஆகும் என கூறி ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் மீண்டுமொரு அதிரடி திட்டத்தை மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். அதாவது, கடலுக்கு அடியில் பயணித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லண்டன் நகருக்கு செல்லலாம்.
இந்த பயணத்திற்கு ஒருமணிநேரமே ஆகும் என்கிறார் அவர். இந்த திட்டத்திற்காக மஸ்கின் போரிங் நிறுவனம் 20 பில்லியன் டொலர் செலவிட உள்ளது.
அட்லாண்டிக் கடலுக்கடியில் 4,800 கிலோமீற்றர் நீளத்தில் சுரங்கப்பாதை அமைத்து, அதில் அதிவிரைவு ரயில்களை இயக்குவதன் மூலம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையேயான பயண நேரத்தை குறைக்க முடியும் என மஸ்க் திட்டமிட்டுள்ளார்.