இரண்டு மாதங்களில் புதிய வரவுசெலவுத் திட்டத்தை சமர்பிக்கவுள்ள பிரான்ஸ் பிரதமர்

#PrimeMinister #France #budget #2025
Prasu
3 months ago
இரண்டு மாதங்களில் புதிய வரவுசெலவுத் திட்டத்தை சமர்பிக்கவுள்ள பிரான்ஸ் பிரதமர்

மிஷல் பார்னியேவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, புதிய பிரதமராக பிரான்சுவா பெய்ரூ அறிவிக்கப்பட்டார். 

இந்த குழப்பத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமல் போனது. பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பெய்ரூ, இதுவரை தனது அமைச்சர்களை நியமிக்கவில்லை. 

இந்நிலையில் புதிய வரவுசெலவுத்திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. பிரதமர் பெய்ரூ, தொலைக்காட்சியில் நேர்காணலில் பங்கேற்றார். 

அதில் வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் பதிலளித்தார். “பெப்ரவரி நடுப்பகுதியில்” வரவுசெலவுத்திட்டம் அறிவிக்கப்படும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

 அதேவேளை, புதிய அரசாங்கம் மீது அத்துமீறிய அழுத்தங்கள் கொண்டுவரப்பட்டால், 49.3 அரசியலமைப்பை பிரயோகிக்க வேண்டி ஏற்படலாம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!