நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெல்லாலகே நீக்கம் - விளக்கம் அளித்த இலங்கை கேப்டன்

#SriLanka #Newzealand #Cricket #Player
Prasu
3 months ago
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெல்லாலகே நீக்கம் - விளக்கம் அளித்த இலங்கை கேப்டன்

மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ODI தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து புறப்பட்டது.

நியூசிலாந்தின் ஆடுகள நிலைமைகளுக்கு ஏற்ப கூடுதல் வேகப்பந்து வீச்சாளரின் தேவையை காரணம் காட்டி, இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

தேர்வுக்கு பின்னால் உள்ள நியாயத்தை விளக்கிய அசலங்கா, “நியூசிலாந்தின் நிலைமைகளுக்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைச் சேர்க்க விரும்பியதால் துனித் நீக்கப்பட்டார். 

எனக்கும், தேர்வுக் குழுவுக்கும், பயிற்சியாளருக்கும் இது மிகவும் கடினமான முடிவு. சில நேரங்களில், நியூசிலாந்தில் உள்ளதைப் போன்ற ஆடுகளங்களில் விளையாடும்போது இதுபோன்ற அழைப்புகள் செய்யப்பட வேண்டும்.

"நியூசிலாந்து ஒரு வலுவான அணி, குறிப்பாக உள்நாட்டில். அவர்கள் தங்கள் அணியில் பல பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை, இது கூடுதல் சவாலாக இருக்கும். எவ்வாறாயினும், எமது அனுபவமிக்க வீரர்கள் புதியவர்களை வழிநடத்தி அணியை வலுப்படுத்த உதவுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், டிசம்பர் 28 மற்றும் 30, 2024 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்ட போட்டிகளுடன், ஜனவரி 2, 2025 அன்று இறுதி ஆட்டம் தொடங்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!