மேஷ ராசியினருக்கு யோகமான நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
8 hours ago
மேஷ ராசியினருக்கு யோகமான நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: யோகமான நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். சிறு வியாபாரிகள் உழைப்பால் உயருவர்.கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும். மனதில் உற்சாகம் உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரம் லாபம் தரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.ரோகிணி: வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். தம்பதிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.மிருகசீரிடம் 1,2: பழைய கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் சேரும். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.திருவாதிரை: உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். நீங்கள் திறமையுடன் செயல்பட செயல் வெற்றி அடையும். இழுபறி வேலை முடிவு பெறும். புனர்பூசம் 1,2,3: தொழில் முன்னேற்றமடையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். எந்த ஒரு வேலையிலும் திட்டமிட்டு லாபமடைவீர்கள். 

கடகம்

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தின் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும்.பூசம்: பண வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். ஒரு சிலர் கண் மருத்துவரை சந்திப்பீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பூரம்: உங்கள் மனம் தெளிவாகும். வரவேண்டிய பணம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். பெரியவர்கள் வழிகாட்டுதல் லாபம் தரும். வியாபாரம் விருத்தியாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். மாலையில் நிலைமை சாதகமாகும்.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

துலாம்

சித்திரை 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்.சுவாதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். மதியம் வரை உங்கள் வேலைகள் திட்டமிட்டபடி நடக்கும். அதன்பின் நெருக்கடிக்கு ஆளாவீர். 

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: பொருளாதார நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.கேட்டை: நேற்றைய பிரச்னை விலகும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். மதியத்திற்கு மேல் விருப்பம் நிறைவேறும். 

தனுசு

மூலம்: தெய்வ வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும்.பூராடம்: சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மனக்குழப்பம் விலகும்.உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர். பெரியோர் ஆதரவால் முயற்சி லாபமாகும். செல்வாக்கு உயரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.திருவோணம்: இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்கள், வாகனப் பயணத்தில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும். இன்று மதியம்வரை அனைத்திலும் அமைதி காப்பது நல்லது. 

கும்பம்:

அவிட்டம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்ப நெருக்கடி விலகும். மதியத்திற்குமேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிலைமை மாறும்.சதயம்: கூட்டுத் தொழிலில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் இன்று உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: ஆதாயமான நாள். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வருமானம் உயரும்.உத்திரட்டாதி: மறைமுகப் போட்டியாளர் உங்கள் வழியிலிருந்து விலகுவர். குடும்பத்தில் அமைதி உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மேலும் ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.lanka4.com/category/spirituality

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!