கனடிய பிரதமரை பதவி விலக கோரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள்

#PrimeMinister #Parliament #Canada #Resign
Prasu
4 hours ago
கனடிய பிரதமரை பதவி விலக கோரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள்

கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

ட்ரூடோவின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. எனவே சட்டங்களை நிறைவேற்றப் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு ட்ரூடோவுக்குத் தேவைப்படுகின்றது.

இக்கட்டான சூழலில் கனடாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. அடுத்த மாதம் 20 ஆம் திகதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும் கனடிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக டொனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

கனடிய ஏற்றுமதியில் முக்கால்வாசி அமெரிக்காவுக்கே செல்கிறது. இந்நிலையில், ட்ரூடோ தம் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்திருக்கிறார்.

 இந்த வாரத் தொடக்கத்தில் கனடியத் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான கிரிஸ்டியா ஃப்ரீலண்ட் (Chrystia Freeland) பதவி விலகினார். அதனால் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!