உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 18 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு
ஒளி நிறைந்த நிலவின் படமும் குளக்கரையும் ஜீவ ஜந்துக்களும் போன்றவைகளை குறிக்கும் படங்கள் எகிப்திய ஓவியங்களில் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன.
தேவ கன்னிகை வசியம் என் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் சொல்லுகின்றன. 1 என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைவதையும் 9 என்ற செவ்வாயின் தன்மை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது.
தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது. பூசல், போராட்டம், தீ, நீர், புயல் ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் குறிக்கிறது.
18 நாள் நடந்த பாரத யுத்தத்தையும் பகவத் கீதையின் 18 அத்தியாத்தையும் 18 படிகளை கடந்தால் ஐயப்ப தரிசனம் என்பதையும் இவ்வெண் உணர்த்துகிறது.
பெயரில் இவ்வெண் அமைவதை விட ஹீப்ரு இந்த 18 ம் எண் அமையும் பொழுது இரட்டிப்பான தீமைகளை வழங்கி விடுகிறது.
18ம் எண்ணில் பெயர் உடையவர்கள் தீய குணங்கள் தெரியாத வண்ணம் காட்சியளிப்பார்கள். 1 என்ற ஆத்மகாரனும் 8 என்ற ஆயுள் காரனும் இணைந்து யுத்த காரனான 9 ஐ வெளிபடுத்துவதால் மனதுக்கு மாறான காரியங்கள் நிகழ்ந்தே வருகின்றன.
பிறந்த தேதி 2,11, 20, 29 மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் ஹீப்ரு எண் 2க வருபவர்கள் இந்த 18 ம் எண்ணில் பெயரை வைத்து கொண்டால் உடல் சிதறுண்டு போதல் அல்லது சேதப்படுதல் அகால மரணங்களுக்கு ஆளாக கூடும்.