நத்தார் தாத்தா வேடமிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ஒன்றாரியோ மாகாண முதல்வர்
#Canada
#christmas
#Mayor
Prasu
19 hours ago
கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் நத்தார் தாத்தா போல் வேடமிட்டு நத்தார் செய்தியை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் டக் போர்ட் சமூக ஊடகங்களின் வாயிலாக காணொளி ஒன்றின் மூலம் நத்தார் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். ஒன்றாரியோ மக்களுக்கும் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டு காணொளி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்காக நன்றி பாராட்டுவதாக டக் போர்ட் தெரிவித்துள்ளார்.