உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 19 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
17 hours ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 19 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

சூரியனின் ஆதிக்க எண்ணும் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும். 

மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . " ஆகாய அரசகுமாரன்" "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள்.

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது. லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த 19 ம் எண்ணினருக்கு சுலபமாக கிடைத்து விடும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும்.

பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் . இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். 

கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த எண்ணிற்கு உண்டு.

நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த எண்ணிற்கு விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் . 

உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் . பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே இந்த 19 எண்ணில் அமைந்தால் மிகுந்த மேன்மை ஏற்படும். 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 8 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் ஆபத்துக்கள் உண்டாகும் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!