கனடாவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மெக்சிகோவில் கொலை
#Canada
#Murder
#Crime
#Mexico
Prasu
11 hours ago
கனடாவில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபரை கியூபெக் மாகாண போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் குறித்த நபர் மெக்சிகோவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதெயு புலென்ஜர் என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு குறித்த நபருக்கு எதிராக கியூபிக் மாகாண போலீசார் பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்திருந்தனர்.
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் என குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
உடற்பயிற்சி மையத்திலிருந்து வெளியே வந்த போது வாகன தரிப்பிடத்தில் வைத்து குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.